Friday 7 September 2012

மேம்படுத்தப்பட்ட கூகிளின் தேடல் - Knowledge Graph


இணையத்தில் தேடுவது என்றாலே அது கூகிளில் தான். உலக மக்களின் ரசனைக்கு ஏற்ப கூகிளின் தேடல் உத்திகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதாலே கூகிள் தேடுபொறி இணையத்தில் முதன்மையானதாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தளங்களிலிருந்து விரைவாக தகவல்களை எடுத்துக் கொடுக்குமாறு Personal Search என்ற உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது கூகிள் தேடலில் Knowledge Graph என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

Knowledge Graph என்றதும் புரியாமல் விழிக்க வேண்டாம். கூகிளில் ஒரு விசயத்தைப் பற்றி தேடும் போது அதற்குப் பொருத்தமான தளங்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் காட்டும். ஆனால் இப்போது வழக்கமான தேடல் முடிவுகளோடு அந்த விசயத்தைப் பற்றிய புகைப்படம் அல்லது மேப், சிறிய குறிப்பு, அதன் தொடர்புடைய தேடல்கள்(Related Searches) போன்ற மேலதிக தகவல்களை வலதுபுறத்தில் சைட்பார் போன்று காட்டும்.

இதன் மூலம் விரைவாக நீங்கள் தேடும் ஒரு விசயத்தைப் பற்றிய மேலோட்டத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் பிற மக்கள் இதனோடு தொடர்புடைய வேற விசயங்கள் என்னென்ன தேடியிருக்கிறார்கள் என்றும் அறியலாம். இந்த வசதியில் முக்கிய பிரபலங்கள், நடிகர்கள், தலைவர்கள், திரைப்படங்கள், நகரின் முக்கிய கட்டிடங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள், முக்கிய இடங்கள் (Landmarks) போன்றவற்றைத் தேடும் போது இந்த உடனடிக் குறிப்புகளைப் பெறலாம்.

கீழிருக்கும் மாதிரி தேடல்களைப் பார்த்தால் எளிதாகப் புரியும்.
1. Popular Persons
2. Landmarks
3. Space things
4. Movies
இந்த அட்டகாசமான கூகிளின் மேம்படுத்தப்பட்ட Knowledge Graph தேடல் வசதி இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தற்போது Google.com முகவரியில் செயல்படுகிறது. பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.

No comments:

Post a Comment