கவசமுடையோர் காயமடையார்!--உபயோகமான
தகவல்கள் !
தமிழகத்தில் பெரும்பாலான விபத்துகள் இரு சக்கர வாகனங்களால்தான் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் பலரும் தலையில் பலத்த காயமடைந்துதான் உயிர் இழந்திருக்கிறார்கள். அதனால்தான் ஹெல் மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் நிறையப் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. ஹெல்மெட் அணிபவர் களில் சிலரும் சாலை ஓரத்தில் விற்கப்படும் தரமற்ற ஹெல்மெட்டை வாங்கி அணிகிறார்கள். இந்தச் சாலையோரக் கடைகளில், ஐ.எஸ்.ஐ. முத்திரை (?!) கொண்ட ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த (தரத்தில் அல்ல) ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி... பேரம் பேசி 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். ஹெல்மெட் பாதுகாப்பு பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் ஜே.கே.பி.சி.பார்த்திபன்.
'ஹெல்மெட்டின் கடினமான மேல் பகுதி பாலிகார்பனேட் மற்றும் ஃபைபர் கண்ணாடிக் கலவையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடினப் பகுதியை அடுத்து பாலியஸ்டரி னால் உருவாக்கப்பட்ட ஓர் அடுக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து சமயங்களில் மரம், கல் என்று ஏதாவது கடினமான பொருளின் மீது மோத நேர்ந்தால், ஹெல்மெட்டானது பாதிப்பைக் குறைக்கும். அடுத்ததாக, எதிர் காற்றில் கண்களில் தூசி விழாமல் தடுக்க, ஹெல்மெட்டின் முன்புறம் கண்ணாடி (வைசர்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
திடமான ஹெல்மெட்டினை உருவாக்கும் கலவைகள் குறைக்கப்பட்டாலோ அல்லது பிளாஸ்டிக் ஃபைபர் போன்ற உறுதியற்றப் பொருட்களில் செய்யப்பட்டாலோ ஹெல்மெட் திடத்தன்மை இழந்து, எளிதில் நொறுங்கிவிடும். 'இதையெல்லாம் நம்மால் பார்த்து வாங்க முடியாது. சரி... ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பார்த்து வாங்கலாம்’ என்றால், தரமற்ற ஹெல்மெட்களி லும் போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரை பளிச்சென இருக்கிறது. எனவே, முத்திரை யின் வேறுபாட்டைத் தரம் பிரித்து வாங்குவதும் சாத்தியமற்றது. அதனால், பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள 'ஹெல்மெட் ஷாப்’களில் வாங்குவதே நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும். இங்கு தரமான ஹெல்மெட்கள் 700 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
தரமற்ற ஹெல்மெட்களால் ஏற்படும் பாதிப்புகள்:
குறைந்த விலைக்கு நாம் வாங்கும் ஹெல்மெட் தலைவலி மற்றும் கழுத்துவலியை ஏற்படுத்தும். அதோடு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தரமற்ற பஞ்சு சுவாசப் பிரச்னையும் ஏற்படுத்தும். ஒருவர் விபத்தில் சிக்கினால், தலை அடிபடுவதை இத்தகைய ஹெல்மெட்களால் தடுக்க முடியாது. அதோடு ஹெல்மெட் உடைந்து அதன் பிசிறுகள் அடிபட்ட தலையில் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இது மூளைப் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளோடு உயிர் இழப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். எனவே, இதுபோன்ற ஹெல்மெட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
எந்தவிதமான ஹெல்மெட் சிறந்தது?
1. கண்களையும் கண்களைச் சுற்றி உள்ள பகுதிகளையும் தவிர தலை முழுவதும் அடைக்கப்பட்ட ஹெல்மெட்.
2. தாடை தவிர மற்றப் பகுதிகள் அடைக்கப்பட்ட ஹெல்மெட்.
3. தலையின் மேல் பகுதி மட்டுமே அடைக்கப்பட்ட ஹெல்மெட்.
- என மூன்று விதமான ஹெல்மெட்கள் சந்தையில் கிடைக்கின்றன.
ஆண், பெண் யாராக இருந்தாலும் தலை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும் ஹெல்மெட்டை அணிவதே நல்லது. மற்ற இரு ஹெல்மெட்களிலும் தாடைப் பகுதி அடிபடும் வாய்ப்பு உள்ளது. வெறுமனே, அழகுக்காகவும் காவல் துறையின் கெடுபிடிகளைத் தவிர்ப்பதற்காகவும் ஹெல்மெட் அணியும் மனப்பான்மை மாற வேண்டும். ஹெல்மெட் என்பது உயிரைக் காக்கக்கூடிய உபகரணம் என்பதை நெஞ்சில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
ஹெல்மெட் அளவில் பெரியதாக இருந்தால் த¬லயோடு கச்சிதமாகப் பொருந்தாமல், ஆடிக்கொண்டு இருக்கும். மிகவும் இறுக்கமாக இருந்தால் அது தலைவலியை உண்டாக்கும். வாங்கும் இடத்திலேயே ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக அணிந்து பார்த்துப் பொருத்தமான ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஹெல்மெட் வாங்கிய பின்பு:
ஹெல்மெட்டை வெறுமனே தலையில் கவிழ்த்துக்கொண்டு வண்டி ஓட்டினால் பயன் இல்லை. ஹெல்மெட்டோடு வரும் ஸ்ட்ராப்பை தாடையோடு இறுகப் பொருத்திக்கொண்டு ஓட்ட வேண்டும். இல்லை எனில் விபத்து நேரிடும்போது, ஹெல்மெட் தலையில் இருந்து கழன்றுவிடும் ஆபத்து உள்ளது.
வாகனத்தை ஓட்டுபவர் மட்டும் அல்லாமல், உடன் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிதல் வேண்டும். பெரும்பாலான விபத்துக்களில் வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்திருப்பவர்கள்தான் பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்குக் காரணம், விபத்து சமயத்தில், வாகனத்தை ஓட்டிச் செல்பவர் சட்டென பிரேக்கினை அழுத்துகிறபோது, எந்தவிதப் பிடிமானமும் இன்றி பின்னால் அமர்ந்திருப்பவர் நிலை குலைந்து தூக்கி எறியப்படுவார். அதனால், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம்''.
'உயிர்தான் முக்கியம்!’
பொதுவாக ஹெல்மெட் அணிய மறுப்பவர்கள் 'தலைமுடி கொட்டும், வியர்வையால் நீர் கோத்துக் கொள்ளும்’ என்று கூறுவார்கள். ''நம்முடைய தோல்கள் தண்ணீர் உள்ளே புக முடியாதபடி மிகவும் பாதுகாப்பான அமைப்புகொண்டது. எனவே, தலையில் சுரக்கும் வியர்வை தோலுக்குள் இறங்கி, ஜலதோஷம் வரும் என்பது தவறான நம்பிக்கை'' என்கிறார் சருமப் பராமரிப்பு மருத்துவர் பிரியா. ''ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் உள்ள வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரக்கும். இதனால், பொடுகு ஏற்பட்டு, முடி உதிர்வதற்கான வாய்ப்பு கூடும்’ என்று காரணம் காட்டியும் ஹெல்மெட்டைத் தவிர்க்கக் கூடாது. இதெல்லாம் சுலபமாக தீர்க்கக்கூடியப் பிரச்னைகள். பருத்தித் துணியை தலையில் கட்டிவிட்டு அதன் மேல் ஹெல்மெட் அணிந்தால் துணியானது ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். சருமத்துக்கும் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மேலும், ஹெல்மெட் அணிபவர்கள் தினசரி அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்புவைப் பயன்படுத்தி தலைக்குக் குளித்தால் முடி உதிர்வைத் தடுக்கலாம். சுருக்கமாக சொன்னால் உயிரைவிட முடி அவ்வளவு பெரிதானது இல்லை. அதனால் ஹெல்மெட் அவசியம்'' என்கிறார்.
நன்றி
மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!
குற்றவாளிகளை கண்டுபிடிக்க முன்பெல்லாம் தொலைபேசியை ஒட்டுக் கேட்பார்கள். இப்போது அவர்கள் தங்களின் தொடர்பு தளங்களை மாற்றி வருவதால் அரசுகளும் புது முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இங்கிலாந்து அரசு கேட்டுக்கொண்ட ” இனி இங்கிலாந்தில் வாசிக்கும் விக்கி பயனாளார்கள் ஏதேனும் சந்தேகிக்கும் படியான பக்கங்களை (வெடி பொருட்களை செய்வது எப்படி, கொலை செய்வது, தற்கொலை) படித்தால் அவர் பற்றிய தகவல்கள் இனி இங்கிலாந்து காவல் துரைக்கு (துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும்”
எனும் விதியை திரு. ஜிம்மி வெல்ஸ் (Wikipedia Fouder) அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார். நீங்கள் ஒரு வேளை கண்டிப்பாக எமது பயனாளார்கள் எந்தப் பக்கத்தை பார்க்கிறார்கள் என விரும்பி உங்களின் இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISPs like Airtel/BSNL in England) அழுத்தம் கொடுத்தால்; நான் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணர்களுக்கும் Encrypt செய்யப்பட்ட பக்கங்களை கொடுத்து உங்களின் ISP எவரும் பார்த்தால் Wikipedia.org என்று மட்டுமே தெரியும்., விளக்கமாக அது எந்தப் பக்கம் என தெரிய வராது. என இங்கிலாந்து அரசை எதிர்த்துள்ளார்.
இது மட்டுமல்ல., அமெரிக்கர்களின் Facebook Chat செய்திகளையும் அமெரிக்க அரசு உளவு பார்த்து வருகிறது. Facebook இல் இருக்கும் சிறார்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்க.. எவரேனும் குறைந்த வயது கொண்ட ஆண் / பெண் பயனாளார்களிடம் தொடர்ந்து Chat செய்தால் அவர் பாலியல் குற்றவாளியாக இருக்கலாம் என அமெரிக்க அரசு சந்தேகிக்கிறது.
வரவிருக்கும் புதிய உளவு முறைகள்:
மின்னஞ்சல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட இருக்கின்றன. உண்மையிலேயே குற்றவாளிகள் மட்டும் உளவு பார்க்கப்பட்டால் பரவா இல்லை.. அனைத்து அரசுகளும் அனைத்து மக்களின் நடவடிக்கைகளையும் உளவு பார்க்க விரும்புகின்றன.
ஒரு வேலை பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுமென்றால்., அவர்களுக்கு பாதுகாப்பு இருந்தும் பயனில்லை.
இன்று அனைத்து கைபேசி கடைகளிலும் சாம்சங் விரும்பி வாங்கப்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் நோக்கியா கைப்பேசியை தவிர வேறு எதையும் நாம் விரும்பி வாங்குவதில்லை.
வாழ்வா சாவா? தனது இறுதி ஆயுதத்துடன் நோக்கியா
இன்று அனைத்து கைபேசி கடைகளிலும் சாம்சங் விரும்பி வாங்கப்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் நோக்கியா கைப்பேசியை தவிர வேறு எதையும் நாம் விரும்பி வாங்குவதில்லை.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கைபேசி சந்தையின் ராஜாவாக இருந்த நோக்கியா இப்போது 3 பில்லியன் யூரோ நட்டத்தில் உள்ளது. மேலும் 10000 பணியாளர்களையும் தூக்கியுள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம் Android கைபேசிகளை அது வடிவமைக்காமல் தனது சொந்த கைபேசி இயக்கு தளம் Symbion கைபேசிகளை மட்டுமே அது விற்பனை செய்து வந்தது. ஆனால் சாம்சங் நிறுவனம் Android ஐ தனது பல கைபேசிகளிலும் வைத்து விற்று லாபம் சம்பாதித்தது.
2007இல் Apple iPhone வந்த பின்னர் நோக்கியா பல சவால்களை சந்தித்தது. இப்போது முழுக்க முழுக்க Windows Phone இயக்கு தளத்தை மட்டுமே தனது கைபேசிகளில் பயன்படுத்த முடிவு செய்து Lumia கைபேசிகளை விற்பனை செய்து வருகிறது.
iPhone மற்றும் Android இயக்குதளங்களுக்கு ஒரு சரியான மாற்றாக உள்ள இந்த Windows Mobile 7.5 இயக்கு தளம் மெதுவாக வளர்ந்து வருகிறது. இப்போது புதிதாக Windows 8 இயக்கு தளத்தை தமது கணினி மற்றும் கைபேசி சாதனங்களில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது Microsoft. உலகில் விற்கப்படும் ஒவ்வொரு Android கைப்பேசிக்கும் Microsoft நிறுவனம் royalty மூலமாக பெரும் தொகையை Samsung, HTC நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது. ஆனாலும் தனது சொந்த இயக்கு தளம் Windows Phone 7.5 & Windows Phone 8 வெற்றியடைய வேண்டும் என Microsoft பல முயற்சிகளை செய்கிறது.
உலக அளவில் உள்ள கைபேசி சந்தையில் 3.7% மக்களால் மட்டுமே பயன்பாடில் உள்ள Windows Phone 7 (Android 68% , Apple 17%) 2013 இறுதிக்குள் 10 சதவீதமாக உயர வேண்டும் இல்லையென்றால் நோக்கியா தமது சொத்துக்களை விற்றுவிட வேண்டும் அல்லது தமது கம்பெனியையே விற்கும் சூழல் உருவாகி நோக்கியா அழிந்து விடும்.
Apple தொடுத்த பல வழக்குகளில் சிக்கி பல கோடி டாலர் அபராதம் செலுத்திய Samsung பெரும் சிக்கலில் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி Androidக்கு மாற்றாக மக்கள் Windows Phone வாங்க விரும்பலாம். மற்றும் புதிதாக வரவுள்ள iPhone 5க்கு போட்டியாக விலை மற்றும் தரத்தில் உறுதியாக புதிய Lumia உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Qualcomm Dual Core Processor
4.3 Inch Display with HIGH Resolution
Powerful cameras in both side
NFC Technology for Wireless payments
Skype calling
4.3 Inch Display with HIGH Resolution
Powerful cameras in both side
NFC Technology for Wireless payments
Skype calling
ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் iPhone5க்கு(அடுத்த மாதம் அறிமுகம்) போட்டியாக இந்த மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்கிறது நோக்கியா.
பச்ச பொத்தான் – சிவப்பு பொத்தான் என எளிமையாக இருந்த காலத்தில் உள்ள மக்கள் இன்னும் Smart Phone னுக்கு மாறவில்லை. Windows Phone எளிமை உணர்ந்து மக்கள் அதிகமாக Lumia கைபேசிகளை வாங்கினால் மட்டுமே நோக்கியாவை காப்பாற்ற முடியும்.
ஈ'மெயில்(Email) கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அவர் ஒரு தமிழன்.
இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித

்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘ஈமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது.
இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தைhttp://www.inventorofemail.com/
தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

No comments:
Post a Comment