Sunday 25 November 2012

எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்


கணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.


Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.


இந்த மென்பொருள் என்ன செய்கிறது ?

இந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை வயர்லெஸ் சேவை மூலம் அதனை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது. இதன் மூலம் மொபைல், பிராண்ட்பேண்ட், 3G, Wi-fi போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும். உங்கள் கணிணியை மற்ற கணிணிகள் அணுகுமாறு Wi-fi Hotspot ஐப் போல மாற்றுகிறது.



இதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவிகளும் ( Mobile, PC, Laptop, Tablet pcs, Android devices ) உங்களின் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல் வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தால் மட்டுமே இணைப்பைப் பெற முடியும்.

எப்படிப் பயன்படுத்துவது?

1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

2. நிறுவியதும் உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.

3. Wi-fi Name – உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணிணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.

4. Password – மற்ற கணிணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5. Internet – இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதைத் தேர்வு செய்யவும். (எ.கா) Local Area Connection, Airtel

6. Wi-Fi – இதில் உங்கள் கணிணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும். (எ.கா) Wireless Area Connection 1


7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.

இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை
Connected Clients இல் பார்க்க முடியும்.

இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீட்டில் , கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். மேலும் இதைக் கொண்டு வணிகரீதியாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம்.

இறுதியாக இந்த மென்பொருள் இலவசமானது. அற்புதமானது.

தரவிறக்கச்சுட்டி : Download Connectify

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்


பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்று
ஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்
பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆசை அதிகமிருந்தது.

எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்
Appllo Sindhuri என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account - பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள கணக்கு ) ஆரம்பித்து வெகு நாட்களாய் பணம் போடாமல் இருந்தேன். இந்த வருட தொடக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை அதல பாதாளத்தில் குறைந்தபோது நாம் இப்போதாவது முதலீடு செய்வோம் என்று முடிவெடுத்தேன். சிலரோ சத்யம் நிறுவனம் பட்டியலில் இருந்தே தூக்கப்படும் என்று பயமுறுத்தினர்.

இருந்தாலும் எதோ ஒரு சிறு நம்பிக்கையில் ஜனவரி 23 அன்று வாங்கி விட்டேன்.
முதலீடு செய்யும் போது ஒரே பங்கிலேயே செய்யக்கூடாது.வேறு
சில பங்குகளிலும் முதலீடு செய்தால் நட்டத்தை குறைக்கலாம் என்று படித்தது நினைவுக்கு வர என்னிடம் இருந்த 2000 ரூபாயை இவ்வாறு பிரித்து முதலீடு செய்தேன்.

Sathyam --->50 x 28.50 = 1425
RNRL ------>8 x 52.50 = 420
GVK -------->7 x 20.80 = 125

முதலீடு செய்தபின் அவ்வப்போது சந்தை நிலவரத்தைக் கவனித்து வந்தேன். ஏறியும் இறங்கியும் வந்த சந்தை பயமுறுத்தினாலும் கவலைப்படவில்லை. சரியாக ஐந்து மாதம் கழித்து ஓரளவுக்கு எனக்கு லாபம் வந்தபோது June 23 ஆம் தேதி விற்று விட்டேன். ஏனெனில் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் தள்ளிப்போடக் கூடாது. இப்போது எனக்கு கிடைத்த தொகை 5000 ரூபாய்.சத்யம் 80 ரூபாய்க்கு போனதால் எனக்கு இந்த லாபம் கிடைத்தது.அதற்கடுத்து இப்போது சந்தை இறங்கிவிட்டது.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டவை என்னவென்றால்,

1. விலை குறையும் போது வாங்க வேண்டும்.
அதிகமாகும் போது விற்று விட வேண்டும்.
2. அதிக லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.
3. அவ்வப்போது சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும்.
4. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
5. தினசரி வர்த்தகத்தில் உடனே இறங்கக்கூடாது.


அதேபோல
 SuperTex Industries என்ற பங்கை நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு போன அக்டோபர் மாதத்தில் வாங்கியிருந்தால் இப்போது நீங்கள் ஒரு லட்சத்திற்கு அதிபதி ஆயிருக்கலாம். இதைப்பற்றி பார்க்க . அப்போது இதன் ஒரு பங்கின் விலை 43 காசுகள் . இப்போதோ 53 ரூபாய். எனவே இது 100 மடங்காக உயர்ந்துவிட்டது. இது போல சரியான உத்திகளோடு செய்யல்பட்டால் வெற்றி காண முடியும்.

தயங்கும் பெண்கள் கூட இப்போது முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

தமிழ் இணையதளங்கள் :

http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/


ஆங்கில இணையதளங்கள் :

http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

கூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)


Google Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.

கூகிள் நிறுவனம் தனது வருமானத்தில் 97 சதவீதம் ஆட்சென்ஸ் மூலமாகவே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரங்களில் ஒருவகையானது CPC Ads (Cost per Click). இந்த முறையில் ஒரு விளம்பரத்தை ஒரு தடவை கிளிக் செய்தால் இவ்வளவு காசு எனக் கணக்கிடப்படும். இதில் தான் வருமானம் அதிகளவில் வரக்கூடும். மற்றொரு முறையானது CPM Ads (Cost per Impressions)இதில் அந்த விளம்பரம் எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப பணம் நிர்ணயிக்கப்படும். ஆட்சென்சில் பொதுவாக 1000 முறைக்கு இவ்வளவு காசு என வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கிற வருவாய் குறைவாகவே இருக்கும்.

மேலெ சொன்ன CPC விளம்பரங்கள் மூலம் நன்றாக வருவாய் வரவேண்டுமெனில் முக்கிய குறிச்சொற்கள் நமது கட்டுரைகளில் தேவையான அளவில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுக்காக இந்த குறிச்சொற்களை அதிகமாக போட்டோ அல்லது இந்த குறிச்சொற்களை மட்டுமே மனதில் நினைத்து கட்டுரைகளை எழுதக்கூடாது. WordStream என்ற நிறுவனம் நீண்ட நாட்கள் ஆராய்ந்து கூகிள் ஆட்சென்சில் அதிக பணம் தரும் குறிச்சொற்கள் எவையெவை எனப் பட்டியல் தயாரித்துள்ளது. இந்த குறிச்சொற்களை மையமாக வைத்து வலைப்பூவை நடத்தி வந்தால் உங்களுக்கும் வருமானம் அதிகளவில் வரும். வலைத்தளம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.

Where Does Google Make Its Money? [ infographic ]
Google Adsense Top 20 Keywords 


1. Insurance (example keywords in this category include "buy car insurance online" and "auto insurance price quotes")
2. Loans (example keywords include "consolidate graduate student loans" and "cheapest homeowner loans")
3. Mortgage (example keywords include “refinanced second mortgages” and “remortgage with bad credit”)
4. Attorney (example keywords include “personal injury attorney” and “dui defense attorney”)
5. Credit (example keywords include “home equity line of credit” and “bad credit home buyer”)
6. Lawyer ("personal injury lawyer," "criminal defense lawyer)
7. Donate ("car donation centers," "donating a used car")
8. Degree ("criminal justice degrees online," "psychology bachelors degree online")
9. Hosting ("hosting ms exchange," "managed web hosting solution")
10. Claim ("personal injury claim," "accident claims no win no fee")
11. Conference Call ("best conference call service," "conference calls toll free")
12. Trading ("cheap online trading," "stock trades online")
13. Software ("crm software programs," "help desk software cheap")
14. Recovery ("raid server data recovery," "hard drive recovery laptop")
15. Transfer ("zero apr balance transfer," "credit card balance transfer zero interest")
16. Gas/Electricity ("business electricity price comparison," "switch gas and electricity suppliers")
17. Classes ("criminal justice online classes," "online classes business administration")
18. Rehab ("alcohol rehab centers," "crack rehab centers")
19. Treatment ("mesothelioma treatment options," "drug treatment centers")
20. Cord Blood ("cordblood bank," "store umbilical cord blood")

மேலும் அதிக தகவல்கள் பார்க்க
Source : http://www.wordstream.com/blog/ws/2011/07/18/most-expensive-google-adwords-keywords

உலகில் மிக மலிவான விலையில் இந்தியாவின் டேப்ளட் பிசி Akash


டேப்ளட் பிசி (Tablet PC) என்று அழைக்கப்படும் மினி வகையான கம்ப்யூட்டர்கள் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. ஆப்பிள் ஐபேடும் இந்த வகையில் சார்ந்ததே. சாம்சங், ஆப்பிள் உட்பட பெரும்பாலான நிறுவனங்களின் டேப்ளட் பிசிகள் விலையில் அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வம் இருந்தாலும் வாங்காமல் இருப்பார்கள். இவைகள் கையடக்கமாகவும் கணிணியின் வசதிகளைக் கொண்டும் மொபைல் போன்களின் வசதிகளையும் கொண்டிருப்பதால் பலரால் விரும்பப் படுகிறது. 

இந்திய நாடு உலகிலேயே மலிவு விலையில் முதன்முறையாக ஒரு டேப்ளட் பிசியைத் தயாரித்துள்ளது. அக்டோபர் 6 ந்தேதி டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் இதனை அறிமுகப்படுத்தினார். இந்த தொடுதிரை கணிணி Datawind என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மலிவு விலையில் கணிணி அறிவு சென்று சேர வேண்டும் என்ற முயற்சியின் காரணமாக இந்த டேப்ளட் பிசி தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் கருவிகள் மாணவர்களுக்கு 1500 ருபாய் விலையில் வழங்கப்படும். ஆகாஷ் (Akash) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கணிணியைத் தயாரிக்க 2300 ருபாய் செலவானதாகக் குறிப்பிட்டார்கள்.


இதில் உள்ள வசதிகள்:

* ஆண்ட்ராய்டு இயங்குதளம் 2.2 (Android)
* 2GB Hard disk
* 256 Mb RAM
* 2GB External Memory ( Support upto 32GB)
* 3 Hour Battery Power
* 7” Touch Screen Display
* HD Video Processor
* Wifi & 3G Modems
* 2 USB Ports ( கீபோர்டு மற்றும் மவுஸ் இணைக்க முடியும்)


மேலும் இதனை வர்த்தக ரீதியாகவும் நவம்பர் மாதத்தில் Datawind நிறுவனம் 3000 ருபாய் விலையில் அனைவருக்கும் அறிமுகப் படுத்தப் போகிறது. இந்தியக் கணிணிச் சந்தையில் அதிகமான விலையில் விற்கப்படும் பொருள்களுக்கு இடையே இதன் வரவு புதிய மாற்றத்தை உருவாக்கலாம். UbiSlate என்று பெயரிடப்பட்டுள்ள இதில் செல்லுலர் மோடம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இணையப் பயன்பாடும் மொபைல் பயன்பாடுகளும் இதிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உலகின் இணையப் பயன்பாட்டாளர்களில் இந்தியாவும் முக்கிய இடத்தைப் பெறும் எனச் சொல்லப்படுகிறது.

See more visit UbiSlate website

விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transformation Pack


விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம், வேகமான லோடிங், கண்ணைக் கவரும் பயன்பாடுகள் என இதன் வசதிகள் அதிகம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 8 ஐ அறிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் இந்த பதிப்பு வெளியிடப்படும் என்று
சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை Transformation Pack ஆக உருவாக்கி விட்டார்கள். 

Transformation Pack என்பது ஒரு இயங்குதளம் அல்ல. குறிப்பிட்ட இயங்குதளத்தைப் போல தோற்றத்தையும் பயனர் இடைமுகத்தையும் (Graphical User Interface) தற்போதுள்ள இயங்குதளத்திற்குத் தருகிறது. மேலும் இது ஒரு இயங்குதளத்தின் அப்டேட் அல்ல. இதைப் போட்டால் இயங்குதளம் அப்டேட் செய்யப்படாது என்பதையும் அறிய வேண்டும்.


இந்த மென்பொருள்களின் மூலம் தற்போதுள்ள இயங்குதளத்திலிருந்து எந்த ஒரு இயங்குதளத்தின் தோற்றத்தைப் போலவும் மாற்ற முடியும். ( Windows to Linux
distributions, Mac Os) இந்த மென்பொருளை நீக்கிவிட்டால் பழைய தோற்றம் கிடைத்துவிடும்.

விண்டோஸ் 8 இன் தோற்றத்தை அதன் பதிப்பு வெளியிடப்படும் வரை காத்திருக்காமல் உங்கள் கணிணியில் காண்பதற்கு ஆசையிருந்தால் இதன் மூலம் பயன்படுத்தலாம்.


இதை நிறுவும் முன் உங்கள் கணிணியில் இருக்க வேண்டியவை.

1. கணிணியின் இயங்குதளம் விண்டோஸ் 7 Service Pack1 ஆக இருக்க வேண்டும்.
2. இந்த மென்பொருள் 32 bit மற்றும் 64 bit இரண்டிலும் செயல்படும். இருந்தாலும் 32 பிட்டில் சிறப்பாக செயல்படும்.
3. கணிணியில் டாட் நெட் பிரேம்வொர்க் ( Dot Net Framework 4.5 ) நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

இதனை நிறுவும் முன்னர் கணிணியில் System Restore point அமைத்துக் கொள்வது நல்லது. இதற்கு Control panel -> System->System Protection->Create செல்லவும். நிறுவிய பின்னர் எதேனும் சிக்கல் என்றால் எளிதாக மீட்டுக் கொள்ள முடியும்.

தரவிறக்கச்சுட்டி : Download Windows 8 Transformation pack

விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு


விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.

GodMode என்றால் என்ன?

இது புதிதாக எந்த வசதியையும் உருவாக்காது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மறைந்திருக்கும் ஒரு வசதியாகும். கணிணியின் Control Panel தான் அதன் முக்கிய அமைப்புகளைக் கையாளுகிறது. Date, Reginal, users, programs, display என்று பலவகையான அமைப்புகளை மாற்றவும் பயன்படுத்தவும் உதவுகிறது. இதில் ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக Display என்பதில் பார்த்தால் Screen resolution, display settings, External display, orientation, projector என்று பல பிரிவுகள் இருக்கின்றன.

சில அமைப்புகளை எந்த மெனுவில் சென்று மாற்றுவது அல்லது செய்வது என்று தெரியாது. கணிணியின் எல்லாவகையான அமைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கவும் அவற்றை நேரடியாகப் பயன்படுத்தவும் உதவுவது தான் GodMode. இதனால் தெளிவாகவும் எளிதாகவும் கணிணியின் அமைப்புகளை அடைய முடியும்; மாற்ற முடியும். இது ஒரு குறுக்கு வழி போல தான்.

GodMode எப்படி உருவாக்குவது ?

1. கணிணியின் எதாவது ஒரு டிரைவில் சென்று புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.
2. அதற்கு GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என்று பெயரிடுங்கள் (Rename the folder)

3. இப்போது பார்த்தால் Control panel போன்ற படமுள்ள ஐகானாக போல்டர்
மாறியிருக்கும்

அதைக் கிளிக் செய்தால் கணிணியின் அனைத்து அமைப்புகளும் ஒவ்வொரு மெனுவாக பட்டியல் போன்று காணப்படும். அவற்றை கிளிக் செய்து நேரடியாக அடைந்து மாற்றிக் கொள்ளலாம்.


இது விஸ்டா இயங்குதளத்திலும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு பயனர்களுக்கும் கணிணி சர்வீஸ் செய்யும் பொறியாளர்களுக்கும் எளிதாக கணிணியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.