புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3G இண்டர்நெட் சேவையில் BSNL நிறுவனம் தான் அளவில்லா இணையப்பயன்பாட்டை வழங்கிக்கொண்டிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டிருந்த பலர் படம், பாட்டு, விளையாட்டு என தரவிறக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இப்பொழுது சோகமான செய்தியாக தனது இண்டர்நெட் சேவையில் அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. 2G மற்றும் 3G அலைக்கற்றை வரிசையில் பயன்பாட்டில் இருந்த அனைத்து பிளான்களும் தற்போது அளவுப்பயன்பாடாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் போஸ்ட்பெய்டில் 1359 ருபாய்க்கும் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் 1459 ருபாய்க்கும் அளவில்லா இணையப்பயன்பாட்டை பெற்று வந்தனர். இப்பொழுது இவை இரண்டுமே அளவுப் பயன்பாடாக மாறிவிட்டது. புதியதாக மாற்றப்பட்ட கட்டணங்கள் 18.01.2011 லிருந்து வந்துவிட்டன.
கட்டண விகிதம் 10 Kb க்கு 0.02 ருபாயாக கணக்கிடப்பட்டு அளவைத் தாண்டி விட்டால் இந்தக்கட்டணம் இனிமேல் கூடுதலாக வசுலிக்கப்படும்.
BSNL Postpaid Rates
2G Service
Rs.249 – 6GB -30 days ( Previous plan – Unlimited )
3G service
Rs.1359 – 15 GB – 30 days (Previous plan – Unlimited )
Rs.2720 – 35 GB – 30 days (New plan)
Prepaid Rates
2G Service
Rs.274 – 30 days – Unlimited plan withdrawn
Rs.270 – 30 days – 6 GB ( New plan)
3G Service
Rs.1499 – 30 days – Unlimited plan withdrawn
Rs.1500 – 30 days – 15 GB (New plan)
Rs.3000 – 30 days – 35 GB (New plan)
BSNL அதிரடியாக அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் வேறு ஒரு சேவைக்கு மாறினாலும் மாறக்கூடும். இதுவே போதும் என நினைப்பவர்களுக்கு கவலையில்லை.
No comments:
Post a Comment