Showing posts with label pure tamil. Show all posts
Showing posts with label pure tamil. Show all posts

Tuesday, 10 September 2013

தூய தமிழ் பேசலாமா..?

உணவகங்களில் சென்று இப்படி தமிழில் கேட்டால் ஏதோ நம்மை வைக்கிறான் என்று பரிமாறுபவர் சுடு சாம்பாரை கொட்டவோ அல்லது அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

தூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை... பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ...?