Showing posts with label USB. Show all posts
Showing posts with label USB. Show all posts

Monday, 20 January 2014

How to UNLOCK USB dongle Internet Modem and swap another service sim card

டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி?




நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

Thursday, 20 September 2012

USB டிவைஸ்களை கட்டுப்படுத்த...

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.

பயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள். கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled இருந்தால் அதை Disable ஆக மாற்றி சேமித்து விட்டால் பின்னர் USB வழியாக எந்த கருவியும் செயல்படாது.

சில சமயம் USB போர்ட்டில் இயங்கக்கூடிய அச்சடிப்பான் இருந்தால் அதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. இதற்கு நீங்கள் பயாஸில் எந்த மாற்றமும் செய்யாமல் Start – Run சென்று Regedit என்று தட்டச்சு செய்யுங்கள். Registry திறக்கப்பட்டவுடன் கீழ்வரும் பகுதிக்கு செல்லுங்கள்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Services\USBSTOR





Usbstor ஐ கிளிக் செய்தால் வலது பக்க சன்னலில் உள்ள Start என்பதை தெரிவு செய்து அதன் மதிப்பை 4 என்று கொடுத்து விட்டு ரெஜிஸ்ட்ரியில் இருந்து வெளியேறி கணிணியை Restart செய்யவும்.பின்னர் உங்கள் கணிணியில் யாரேனும் பென் ட்ரைவ் போன்றவற்றை செருகி எதையும் நகல் எடுக்க முடியாது. மற்றபடி நீங்கள் Usb பிரிண்டர் இணைத்திருந்தால் அது மட்டும் வேலை செய்யும். மறுபடியும் வேண்டுமானால் அதன் மதிப்பை 3 ஆக மாற்றவும்