Sunday, 25 November 2012

விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு


விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.

GodMode என்றால் என்ன?

இது புதிதாக எந்த வசதியையும் உருவாக்காது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மறைந்திருக்கும் ஒரு வசதியாகும். கணிணியின் Control Panel தான் அதன் முக்கிய அமைப்புகளைக் கையாளுகிறது. Date, Reginal, users, programs, display என்று பலவகையான அமைப்புகளை மாற்றவும் பயன்படுத்தவும் உதவுகிறது. இதில் ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக Display என்பதில் பார்த்தால் Screen resolution, display settings, External display, orientation, projector என்று பல பிரிவுகள் இருக்கின்றன.

சில அமைப்புகளை எந்த மெனுவில் சென்று மாற்றுவது அல்லது செய்வது என்று தெரியாது. கணிணியின் எல்லாவகையான அமைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கவும் அவற்றை நேரடியாகப் பயன்படுத்தவும் உதவுவது தான் GodMode. இதனால் தெளிவாகவும் எளிதாகவும் கணிணியின் அமைப்புகளை அடைய முடியும்; மாற்ற முடியும். இது ஒரு குறுக்கு வழி போல தான்.

GodMode எப்படி உருவாக்குவது ?

1. கணிணியின் எதாவது ஒரு டிரைவில் சென்று புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.
2. அதற்கு GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என்று பெயரிடுங்கள் (Rename the folder)

3. இப்போது பார்த்தால் Control panel போன்ற படமுள்ள ஐகானாக போல்டர்
மாறியிருக்கும்

அதைக் கிளிக் செய்தால் கணிணியின் அனைத்து அமைப்புகளும் ஒவ்வொரு மெனுவாக பட்டியல் போன்று காணப்படும். அவற்றை கிளிக் செய்து நேரடியாக அடைந்து மாற்றிக் கொள்ளலாம்.


இது விஸ்டா இயங்குதளத்திலும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு பயனர்களுக்கும் கணிணி சர்வீஸ் செய்யும் பொறியாளர்களுக்கும் எளிதாக கணிணியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment