Sunday 25 November 2012

தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்


3G Data cards and internet tarrifsஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

3G என்றால் என்ன?

3rd Generation என்பதன் சுருக்கமே 3G ஆகும். மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனத்தமிழில் சொல்லப்படும் இச்சேவையின் மூலம் அதிவேக இண்டர்நெட், மொபைல் டிவி, மொபைல் இண்டர்நெட், விடியோ அழைப்பு (Video calling) போன்றவற்றை அனுபவிக்கலாம்.

BSNL நிறுவனம் தான் இந்தியாவில் முதன் முதலில் சென்ற வருடத்தின் பாதிக்கு மேல் அறிமுகப்படுத்தியது. மற்ற நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு முன்பே வளர்ச்சியடைய வேண்டும் என்ற கொள்கையில் தான் மற்ற நிறுவனங்களின் அறிமுகம் தாமதமாயின.

3G எப்படிப்பெறுவது?

நாம் 3G இணைய சேவையை அனுபவிக்க இரண்டு வழிகள் உள்ளன.இதை
வாங்குவதற்கு ஒரு புகைப்படமும் இருப்பிட சான்றிதழும் தேவை.

1. 3G வசதியுடைய செல்பேசிகள் (3G supported Mobiles)

BSNL, Tata Docoma, Reliance போன்ற நிறுவனங்களின் 3G சிம்கார்டை வாங்கி நமது மொபைல் போனில் போட்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் மொபைல் 3G வசதி இருக்க வேண்டும். BSNL நிறுவனம் 180 ருபாய்க்கு 3G சிம்களை வழங்கி வருகிறது.

2. 3G டேட்டா கார்டுகள் (Data cards)

இரண்டாவதாக கணிணியில் பயன்படுத்திக்கொள்ள பென் டிரைவைப்போல இருக்கும் 3G டேட்டா கார்டுகளை வாங்கிப்பயன்படுத்தலாம். இதில் போஸ்ட்பெய்ட் மற்றும் பிரிபெய்டு இரண்டு சேவையும் உள்ளது. பிரிபெய்டு வாங்கினால் நமது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து பயன்படுத்த்லாம். காசில்லை என்றால் சும்மாயிருக்கலாம்.

3G Data cards and internet tarrifs
இவைகள் 3G டவர் இருக்குமிடத்தில் 3G சேவையாகவும் இல்லாத இடத்தில் சாதாரணமான 2G சேவையாகவும் செயல்படும். BSNL டேட்டாகார்டின் விலை 3000 எனவும் Reliance டேட்டாகார்டின் விலை 2600 க்கும் கிடைக்கிறது. இவற்றின் வேகம் 3.6 Mbps வரையுள்ளது எனச் சொல்லப்படுகிறது. Tata Docomo நிறுவனத்தின் டேட்டாகார்டு விலை தெரியவில்லை. மேலும் இதன் மென்பொருளிலிருந்தே நாம் தொலைபேசி அழைப்புகளும் sms அனுப்பும் செயலையும் மேற்கொள்ளலாம்.

ரீசார்ஜ் கட்டண விவரங்கள்
1.BSNL 3G Data card Tarrifs

Rs.275 – 500 MB ( 30 days)
Rs.440 – 1 GB (30 days)
Rs.606 – 1 GB day + 5 GB in night ( 30 days)
Rs.716 – 2 GB (30 days)
Rs.1102 - 10 GB (30 days)
Rs.1499 – Unlimited ( 30 days)
More details

2.Reliance 3G Data card Tarrifs
Rs.100 – 100 MB ( 30 days)
Rs.199 – 250 MB (30 days)
Rs.399 – 500 MB (30 days)
Rs.649 – 1 GB (30 days)
Rs.899 – 3GB (30 days)
Rs.1499 – 10 GB (30 days)
Rs.2599 – Unlimited (30 days)
More details

3. Tata Docomo 3G Data card Tarrifs
Rs.500 – 650 MB ( 30 days)
Rs.751 – 2 GB (30 days)
Rs.1001 -5 GB (30 days) + Virtually Unlimited (After 5GB speed upto 128 kb/s and after 15GB speed upto 10 kb/s)
Rs.1250 – 10 GB (30 days) +Virtually Unlimited (After 10GB speed upto 128 kb/s and after 20GB speed upto 10 kb/s)
More details

நான் மேற்கண்ட Bsnl மற்றும் Reliance நிறுவனத்தின் 3G சேவையை உபயோகப்படுத்திப்பார்த்தேன். Bsnl ன் சேவையில் டவுன்லோடு மற்றும் அப்லோடு விகிதமும் வேகமாக இருந்தது. Reliance ம் இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. இன்னும் கொஞ்ச நாட்களில் இவற்றின் போட்டியால் டேட்டாகார்டுகளின் விலையும் கட்டணங்களும் குறையும் என நினைக்கிறேன். மேலும் Vodafone, MTS போன்ற நிறுவனங்களும் டேட்டா கார்டுகளை வழங்கிவருகின்றன. இவை இன்னும் பரவலாக நாளாகலாம்.

No comments:

Post a Comment