2010 ஆம் வருடத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வர்த்தக ரீதியாகவும் வெற்றியடைந்த விளையாட்டு தான் Angry Birds. இதை முதன் முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் விளையாடும் படி Rovio என்ற நிறுவனம் கொண்டு வந்தார்கள். அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த விளையாட்டு ஆப்பிளின் ஸ்டோரில் (Apple Store) 12 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இதைக்கண்ட அந்த நிறுவனம் இதை மற்ற ஸ்மார்ட் போன்களுக்கும் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் தயாரித்தது. கடைசியாக விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும் விளையாடும் படி உருவாக்கியுள்ளது.
இந்த விளையாட்டு Puzzle முறையில் அமைந்த ஒரு வீடியோ கேம் ஆகும். கூட்டமாக உள்ள பறவைகளிடமிருந்து வில்லன்களான பன்றிகள் முட்டைகளை திருடி சென்று விடுகின்றன. பன்றிகள் ஒவ்வொரு நிலைகளிலும் மரம், ஐஸ்கட்டி, கல் போன்ற மறைவிடங்களில் பதுங்கி கொள்கின்றன. பன்றிகளை கொன்றால் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். பன்றிகளைத் தாக்க கவண் வில் இருக்கும். அதில் பறவைகள் உட்கார்ந்து கொள்ள நாம் வில்லை இழுத்து விட வேண்டும். லெவல்கள் அதிகமாக செல்லும் போது கடின அளவும் அதிகமாகும்; மேலும் நமக்கு சில ஆயுதங்களும் கிடைக்கும்.
இந்த விளையாட்டை இறுதியில் உள்ள சுட்டியின் மூலம் தரவிறக்கியதும் Rar வகையான கோப்பு ஒன்று கிடைக்கும். அதை Extract செய்து கொள்ளவும். அதில் Angry birds என்ற போல்டர்க்குள் சென்று Angrybirds என்ற exe கோப்பை கிளிக் செய்து விளையாட்டை ஆரம்பிக்கலாம்.
msvcr100.dll காணவில்லை என்ற பிழைச்செய்தி வந்தால் msvcr100 என்ற போல்டரில்இருக்கும் msvcr100.dll கோப்பை C:\Windows\System32 போல்டருக்குள்
காப்பி செய்து போட்டு விடவும். இந்த விளையாட்டு இலவசமாக வழங்கப்படுவதல்ல. விண்டோஸ் XP மற்றும்
விண்டாஸ் 7 இயங்குதளங்களில் விளையாட இயலும். முக்கிய விஷயம் உங்கள் கணினியின் Display Driver கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/-Uhw3lh2/Angry_Birds_PC_Cracked.html
சில எக்ஸ்பீ கணினிகளில் கீழ் உள்ள பிரச்னை வருகிறது.
"The application is failed to start because the application configuration is incorrect. Reinstalling the application may fix the problem."
ஆப்பிளின் Quick Time Player நிறுவுவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
"The application is failed to start because the application configuration is incorrect. Reinstalling the application may fix the problem."
ஆப்பிளின் Quick Time Player நிறுவுவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
மேலும் நண்பர் லக்கி லிமட் Angry Birds பற்றி எழுதிய விளக்கமான பதிவை பார்க்கவும். http://browseall.blogspot.com/2011/02/angry-birds.html
உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். நன்றி!
No comments:
Post a Comment