Thursday 20 September 2012

விண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க...


கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt - எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் முக்கியமான கோப்புகளை தெரியாமல் அழித்து விடும் போது இந்த மாதிரி பிழைச்செய்தியை கொடுக்கும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த/ அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலை. 

ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட வேலைகளைச் செய்ய முடியும்.

1. Access system recovery option,
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues

இந்த டிஸ்க் மூலம் நீங்கள் பூட் ஆகாத கணிணியில் போட்டு Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவும் கடினமான வேலையே இல்லை.

மேலும் கணிணியில் உள்ள கோப்புகளை பேக்கப் செய்வது, குறிப்பிட்ட ரீஸ்டோர் பாயிண்டிலிருந்து (System Restore point) கணிணியை மீட்பது, பொதுவாக ஏற்படும் பிழைகளை நிவர்த்தி செய்வது போன்ற அவசியமான வசதிகளைத் தந்துள்ளது. மேலும் Command prompt மூலம் நீங்களே சரிசெய்யும் வசதியும் உள்ளது.


பூட் ஆகாத கணிணியில் இந்த டிஸ்கைப் போட்டதும் F8 பட்டனை அழுத்தினால் போதும். இதன் வசதிகள் எல்லாம் மெனுவாக காட்டப்படும். கணிப்பொறி வல்லுநரை கூப்பிட வேண்டிய அவசியமின்றி நீங்களே சுலபமாக செய்து விட முடியும்.

இதனைத் தரவிறக்கினால் iso வகையிலான கோப்பாக கிடைக்கும். இதை அப்படியே சிடி/டிவிடியில் எதாவது ஒரு CD Burner மென்பொருள் கொண்டு எழுதிக் கொள்ளுங்கள். (Cd Writing) . ஐஎஸ்ஒ கோப்புகளை சிடியில் எழுதுவதற்குImgBurn மென்பொருள் கொண்டு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

இந்த டிஸ்க் எந்த நிறுவனத்தின் கணிணிகளிலும் விண்டோஸ் 7 (Home, Professional, Ultimate) இன் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.

தரவிறக்கச்சுட்டி :
Download via Torrent 32 Bit | 64 Bit (143 Mb only)

No comments:

Post a Comment