Friday 7 September 2012

நீங்களும் ஒரு புத்தகம் எழுதலாம் பதிப்பகத்தின் துணை இல்லாமலேயே.


பொதுவாக புத்தகம் வாசிப்பது  பரவலாக குறைந்துள்ளது போன்ற தோற்றமே உள்ளது. ஆனால் புத்தக வாசிப்பிருக்காகவே உருவாக்கப்பட்ட கையடக்க திரை கணினி Amazon Kindle e-book reader (Tablet) இந்த வாரம் இந்தியாவிற்கு வந்துள்ளது.
இது முழுக்க முழுக்க புத்தகம் வாசிக்கவே  பெரிதும் பயன்படும். இதில் உள்ள மிக முக்கியமான அம்சம் என்னவென்றால். நீங்கள் ஒரு எழுத்தாளர் என்றால் இந்த Kindle உங்களுக்கு வாசகர்களை மட்டும் அல்ல பணத்தையும் பெற்றுத் தரும். ஆம்., நீங்கள் எந்த பதிப்பகத்தை நோக்கியும் ஓட வேண்டாம். உங்களின் எழுத்துக்களை நேரடியாக Amazon மூலமாகவே ஒரு e-Book ஆக வெளியிட்டு அதை நேரடியாக Kindle உபயோகிக்கும் வாசகர்களிடம் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான இந்த பதிப்பு முறை இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி எவரும் எழுத்தாளர் ஆகலாம்.. மற்றும் படைப்பாளிக்கு கிடைக்க வேண்டிய பணம் இப்போதை விட மிக அதிகமாகவே கிடைக்கும்.
இந்த Kindle   Wifi , 2GB Internal memory, 6inch Display & USB கொண்டு இயங்கும். இதன் அறிமுக விலை Rs. 6999
இவர்கள் ஒரே ஒரு மாடல் மட்டுமே இப்போது அறிமுகம் செய்துள்ளனர்.. ஆனால் பல புதிய மாடல்களும் இவர்களால் அமெரிக்காவில் விற்பனையில் உள்ளது.
படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இது இனிப்பான செய்தியே.. ஆனால் பரம்பரை பதிப்பகத்தார் இதை கண்டிப்பாக வெறுப்பர்.

No comments:

Post a Comment