Thursday 20 September 2012

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க இணையதளம்


முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது.
Untiny தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.
டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா? டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.
சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.
இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் Untiny-ன் பணி.
இணையதள முகவரி - http://untiny.me/

No comments:

Post a Comment