Tuesday 3 September 2013

அறிவியல் கலைச்சொல் அகராதி

DC CURRENT - நேரோட்டம்
DATA - தரவு
DATASHEET - தரவுத்தாள்
DC CURRENT - நேரோட்டம், ஒருதிசை மின்னோட்டம்
DC VOLTAGE - ஒருதிசை மின்னழுத்தம்
DECODE, DECODING, DECODER - குறிவிலக்கு, குறிவிலக்கம், குறிவிலக்கி
DECIMATE, DECIMATION - வீதக்குறை, வீதக்குறைவு - மாதிரித் தரவுகளை அதிக வீதத்திலிருந்து குறைந்த வீதத்திற்கு மாற்றுதல்; இடையுள்ள மாதிரிகள் விடப்படுகின்றன
DECRYPT - மறைவிலக்கு
DEMODULATION - பண்பிறக்கம்
DESCRAMBLING - கலர்விலக்கம்
DETECTOR - உணர்வி
DIAC (DIODE FOR AC) - மாறுமின் இருமுனையம் மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்
DIAMETER - விட்டம்
DIFFERENTIAL, DIFFERENTIATION, DIFFERENTIATOR - வகையீட்டு, வகையீட்டல், வகையீட்டி
DIFFRACTION - அலைவளைவு
DIFFRACTION GRATING - அலைவளைவுக் கீற்றணி
DIODE - இருமுனையம்
DIRECTIONAL ANTENNA - திசைவு அலைக்கம்பம்
DIRECTIONAL COUPLER - திசைவுப் பிணைப்பி
DISCREET VALUES - தனித்த அளவுகள்
DISCHARGE (ELECTRIC) - மின்னிறக்கம்
DISCRIMINATOR - பிரித்துணர்வி
DISTORSION - உருக்குலைவு
DISC - வட்டு
DISH ANTENNA - அலைக்கம்பா
DOUBLE-STUB (IMPEDENCE) MATCHING - இருமுளை (மின் மறுப்புப்) பொறுத்தம்
DRIVER (SOFTWARE) - இயக்கமென்பொருள்
DYNAMO - மின்னாக்கி

E - வரிசை
EARTH GROUND - புவி நிலம்
EARTHING - புவியிடுதல்
EARTH WIRE - புவிக் கம்பி
EDDY CURRENT - சுழலோட்டம்
EGRESS - வெளிவாய்
ELECTRIC FIELD - மின்புலம்
ELECTRICITY - மின்சாரம்
ELECTROCARDIOGRAPH - மின் இதயத்துடிப்பு வரைவி
ELECTRON - எதிர்மின்னி
ELECTRODE - மின்வாய்
ELECTROMAGNETIC INTERFERENCE (EMI) - மின்காந்த இடையீடு
ELECTROMAGNETIC WAVE - மின்காந்த அலை
ELECTROMAGNETICS - மின்காந்தவியல்
ELECTROSTATICS - நிலைமின்னியல்
ELECTROSTATIC DISCHARGE (ESD) - நிலைமின்னிறக்கம் - இரு மின்னூட்டமுடைய பொருட்கள் அருகில் நெருங்கும்போது ஏற்படும் மின்னிறக்கம்
ELECTROSTATIC SENSITIVE (=ESD SENSITIVE) - நிலைமின்பாதிக்கப்படத்தக்க(து)
ELECTRON - எதிர்மின்னி
ELECTRONICS - மின்னணுவியல்
ELEMENT - தனிமம்
EMITTER - உமிழ்வாய்
EMULATION - போன்மம்
END-FIRE ARRAY (ANTENNA) - முனையியக்க அணி (அலைக்கம்பம்)
ENGINE - பொறி
ENTITY - உருபொருள்
ELEVATION - உயர்வு ரேகை
ETHERNET - தூயவெளியம், தூயவெளி வலை
ETHERNET CARD - தூயவெளி அட்டை

F - வரிசை
FABRICATION - கட்டுருவாக்கம்
FACTORIAL - தொடர்பெருக்கு
FALL TIME - விழுநேரம்
FALLING EDGE - விழுவிளிம்பு
FAN-IN - வீச்சு சுருக்கம்
FAN OUT - வீச்சு விரிப்பு
FAR-FIELD REGION - தொலைபுல மண்டலம்
FIDUCIAL - நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
FEED HORN - அலையூட்டுக் குழல்
FETCH CYCLE - கொணர் சுழர்ச்சி
FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம்
FIDELITY - மெய்நிலை
FIELD - புலம்
FIELD PROGRAMMABLE GATE ARRAY - களம் நிரல்படு வாயிலணி
FIELD EFFECT TRANSISTOR (FET) - புலவிளைவுத் திரிதடையம்
FILE - கோப்பு
FILE ALLOCATION TABLE (FAT) - கோப்பு பிரிப்பு அட்டவணை
FINLINE - துடுப்புத்தடம் - மின்சுற்றுப்பலகைகளின் துளைகளில் (vias) அச்சிடப்பட்ட மின்தடங்கள்
FINITE IMPULSE RESPONSE (=FIR) FILTER - முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி - பின்னூட்டம் உடைய இலக்க வட்ப்பி (digital filter); இவை நேரியல் கட்ட சிறப்பியல்வு (குறிகையில் உருக்குலைவு ஏற்படுத்தாத தன்மை) கொண்டவை
FLAT PANEL DISPLAY (FPD) - தட்டைப் பலகக் காட்சி
FLOW CHART - பாய்வுப்படம்
FORWARD BIAS - முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்
FREQUENCY HOPPING - அலைவெண் துள்ளல்
FREQUENCY MODULATION - அலைவெண் பண்பேற்றம்
FREQUENCY SHIFT KEYING - அலைவெண் பெயர்வு இணைத்தல்
FULL ADDER - முழுக்கூட்டி
FUNCTION (MATHEMATICAL) - சார்பு
FUNCTION (SUBROUTINE, SUBPROGRAM) - துணைநிரல்
FUNCTIONALITY - செயல்கூறு
FUSE - உருகி
FUZZY LOGIC - இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம்

No comments:

Post a Comment