புதுடில்லி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மொபைல் போன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், நாளை முதல், ரோமிங்கை இலவசமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொபைல் போன் சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களான, எம்.டி.என்.எல்., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள், ஒரு வட்டத்தில் இருந்து மற்றொரு வட்டத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு, ரோமிங் கட்டணம் வசூலிக்கிறது. இதை இலவசமாக்கும்படி, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர், கபில் சிபல், கடந்த நவம்பர் மாதம், இரு நிறுவனங்களையும் கேட்டு இருந்தார்.பல தனியார், டெலிகாம் ஆபரேட்டர்கள், ரோமிங்கில் இருக்கும் போது, உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என்று அறிவித்ததன. மேலும் வெளி செல்லும் அழைப்புகளுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகை அறிவிப்பை வெளியிட்டன.
இந்நிலையில், டில்லி மற்றும் மும்பையில் சேவையாற்றி வரும், எம்.டி.என்.எல்., நாளை முதல் ரோமிங்கை இலவசமாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, மும்பையில் இருக்கும் வாடிக்கையாளர், டில்லி சென்றால், ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. இதே போல் நாடு முழுவதும், சேவை நடத்தி வரும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ரோமிங்கை இலவசமாக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், ரோமிங்கில் இருக்கும் போது, வெளிசெல்லும் அழைப்புகளுக்கு, உள்ளூர் கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றி யோசித்து வருகிறது அல்லது மாதம், தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'டிராய்' என்ற தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கணக்கின்படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, 9.78 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள், உள்ளனர். இதில், எம்.டி.என்.எல்., லுக்கு, 35.75 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்...

No comments:
Post a Comment