Sunday, 16 December 2012

கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க தயாரா?


தலைப்பை பார்த்து வேட்டிய வரிஞ்சு கட்டி வந்திருக்கும் அண்ணன்களே. அசால்டா வந்திருக்கும் அக்காகளே முதல்லே கும்புட்டு வச்சுக்குறேங்க .
அப்புறம் நான் சவால் விட போறது சி, ஜாவா போல கம்ப்யூட்டர் மொழியில எல்லாம் கிடையாதுங்க. சும்மா சின்ன , சின்ன என்ன சின்ன சும்மா தம்மா துண்டு சமாசாரம் தானுங்க.

ஒரு FOLDER CREATE பண்ணினா போதுங்க . அதுவும் WINDOWS ல பண்ணணுங்க.
அந்த FOLDER NAME  CON  என்று வச்சு CREATE  பண்ணுங்க . SPACE  USE பண்ண கூடாதுங்க அவ்வளவு தானுங்க .
CREATE பண்ணிடீங்கான   எப்படி பண்ணீங்கனு இந்த தம்பிக்கு பின்னுட்டம் வழிய கொஞ்சம் சொல்லி கொடுங்க...

யூ டியூப் டவுண்லோடர்

இணையத்தில் யூ டியூபிலிருந்து வீடியொக்களை பதிவிறக்கம் செய்யாமல் இருக்கமாட்டார்கள்.வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் இருந்தாலும் இது புதியதாக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளீக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Tools  கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Video Link என்பதில் உங்கள் யூ டியூப் வீடியோ யூஆர்எல் முகவரியை போஸ்ட் செய்யவும்.
பின்னர் இதில் உள்ள டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் Audio Mp3,Generic Video,DVD,Apple,Mobile Phone என வரும் பார்மெட்டுக்களில் எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை FaceBook.Twitter,Google+ என்பதன் மூலம் மற்றவர்களுக்கும் தெரியபடுத்தலாம்.
இதன் மூலம் நாம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ நாம் விரும்பிய பார்மெட்டில் விரும்பிய இடத்தில உள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருஙகள்.கருத்துக்களை கூறுங்கள்.

ரகசியத் தகவல்களை அனுப்புவது எப்படி?



நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.

இந்த வசதியை https://oneshar.es/ என்னும் தளம் நமக்கு தருகிறது.


அங்கு சென்று Create One New என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு உங்கள் ரகசிய செய்திகளை கொடுத்து Create Link என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு உங்களுக்கென்று ஒரு சுட்டி (URL) கிடைக்கும். அதில் நீங்கள் க்ளிக் செய்துவிடாதீர்கள். யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ? அவர்களுக்கு அந்த சுட்டியை அனுப்புங்கள். 


அந்த சுட்டியை அவர்கள் க்ளிக் செய்தவுடன் அவர்களுக்கு செய்தி தெரியும். இதை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மீண்டும் அந்த சுட்டியை க்ளிக் செய்தால் அந்த செய்தி இருக்காது.

வீட்டிலேயே வேலை வேண்டுமா?

வீட்டிலேயே வேலை வேண்டுமா?





உங்களுக்கு டைப் அடிக்க தெரிந்து இருந்தால். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். உங்களிடம் இணைய வசதி கொண்ட கணினி இருந்தால் போதும்.


server link: http://work.captchaocr.com:8008/login.php

test id: anand44
pass: 12345


இதில் 24 மணி நேரமும் வேலை செய்யலாம்.
1000 captcha அடித்தால் 0.90$  பெறலாம்.


விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகவும்.
என் e -mail chitrasuraj@gmail.com

ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க...



 
ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?


மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Useபகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

1. திரை ஒளிர்வு (Brightness)


மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth

Status Switch
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget(மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.

3. Live Wallpaper

Live Wallpaper
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets


ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.