Wednesday, 27 November 2013

கப்பலை எப்படி கடலில் இறக்குகிறார்கள்?? how to export the ship at sea watch the amazing video.....




ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது!

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! குழந்தைகளின் பிரிய பிஸிகெட் ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார். கண்டிப்பாக பகிரவும்!

http://nypost.com/2013/10/16/oreos-as-addictive-as-cocaine/

☯☯☯ http://www.osmeb.com/ ☯☯☯


குழந்தைகளின் பிரிய பிஸிகெட் ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார். கண்டிப்பாக பகிரவும்!


http://nypost.com/2013/10/16/oreos-as-addictive-as-cocaine/

Sunday, 24 November 2013

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

 
 

 ஆங்கில புத்தாண்டு 1–1.2014 புதன்கிழமை
பொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமை
திருவள்ளுவர் தினம் 15–1–2014 புதன்கிழமை...
உழவர் தினம் 16–1–2014 வியாழக்கிழமை
குடியரசு தினம் 26–1–2014 ஞாயிற்றுக்கிழமை
தெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமை
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமை
மகாவீர் ஜெயந்தி 13–4–2014 ஞாயிற்றுக்கிழமை
தமிழ்புத்தாண்டு மற்றும்
அம்பேத்கர்பிறந்த நாள் 14–4–2014 திங்கட்கிழமை
புனித வெள்ளி 18–4–2014 வெள்ளிக்கிழமை
மே தினம் 1–5–2014 வியாழக்கிழமை
ரம்ஜான் 29–7–2014 செவ்வாய்க்கிழமை
சுதந்திர தினம் 15–8–2014 வெள்ளிக்கிழமை
கிருஷ்ண ஜெயந்தி 17–8–2014 ஞாயிற்றுக்கிழமை
விநாயகர் சதுர்த்தி 29–8–2014 வெள்ளிக்கிழமை
காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுதபூஜை 2–10–2014 வியாழக்கிழமை
விஜயதசமி 3–10=2014 வெள்ளிக்கிழமை
பக்ரீத் 5–10–2014 ஞாயிற்றுக்கிழமை
தீபாவளி 22–10–2014 புதன்கிழமை
மொகரம் 4–11–2014 செவ்வாய்க்கிழமை
கிறிஸ்துமஸ் 25–12–2014 வியாழக்கிழமை

Thursday, 21 November 2013

ஸ்கேனிங் இல்லாமலே ஆணா பெண்ணா கண்டுபிடிக்கலாம்... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...! :)





வயிற்றிலிருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பண்டைய காலத்தில் தன் தாயினது கருவுற்ற காலத்தை வைத்து கணக்காக கணிக்கப்பட்டது. அக்கணக்கைப் போல் சரியாக குழந்தையும் பிறந்தன...

ஆங்கிலம் என்ற ஒரு மொழியை கடவுளாக்கி தமிழை மறந்து தமிழரின் தலை எழுத்தையே மாற்றிவிட்டார்கள்....






 

Monday, 18 November 2013

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

  

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது....
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

அமரர் சுஜாதா கொடுக்கும் டிப்ஸ் - இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட...



1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது....

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

Saturday, 16 November 2013

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!

                         

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள். துளசி இலை டீ:
சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஆவாரம்பூ டீ:...
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
செம்பருத்திப்பூ டீ:
ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.
கொத்தமல்லி டீ:
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
புதினா இலை டீ:
புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
கொய்யா இலை டீ:
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.
முருங்கைக் கீரை டீ:
முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.
குறிப்பு:
டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்...

 


ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

செல்போன் மூலம் மணி ஆர்டர் முறை..!



தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது....

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால் அதனை பெற்றுக்கொள்ள ஒரிரு நாட்கள் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தது.

இதையடுத்து இந்திய தபால்துறை செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

சம்பந்தப்பட்ட நபர், தமது ஊரில் உள்ள தபால் நிலையத்தில் அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ள முடியும். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செல்போன் மணி ஆர்டரில் பணம் அனுப்பலாம்.



பகிருங்கள் மக்களே...

மெழுகு பூசப்பட்ட “கப்’ – விழிப்புணர்வுக்காக...!

                                              
 
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’ களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்....

தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்’ என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

- அறிவோம் ஆயிரம்.


எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி.?

                                            

How to download Youtube video without any software..?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்தைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்....

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0 இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்

ஏதாவது சந்தேகம் இருந்தால் வீடியோவை பார்க்கவும்..!
https://www.facebook.com/photo.php?v=499560893485264

இன்சூரன்ஸ் பேப்பரை எடுத்துச் செல்ல மறந்துவிட்டீர்களா, இனி கவலை வேண்டாம்.. புது திட்டம் அறிமுகம்...



போலீசில் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:...

வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், போலீசாரிடம் அதை காண்பிக்க முடியும்.

மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும். போலீசாருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

Friday, 15 November 2013

நீங்கள் ஸ்கைப் பயன்படுத்துபவரா? இதனை கட்டாயம் படியுங்கள்..!


வெளிநாட்டில்
இருக்கும் ஒருவருடன்...
நாம் எளிதில் பேச
இன்று பலரும்
பயன்படுத்துவது ஸ்கைப்
நெட்வோர்க்கை தான். இதில் இருக்கும் ஆபத்துகள்
உண்மையில்
பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில்
நீங்கள்
உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது
அது தெரியுமா உங்களுக்கு.
மேலும் ஸ்கைப்பில்
இருக்கும் வைரஸ்
தான்
இணையத்திலேயே மிக
கொடுமையான வைரஸ்.
ஸ்கைப்
பயன்படுத்துவோர்
பெற்று வரும், கெடுதல்
விளைவிக்கும் ஸ்பாம்
மெயில்
குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது.
தற்போது இந்த ஸ்பாம்
வேகமாகப்
பரவி வருவதாக
அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் உங்கள்
கணிப்பொறியை என்னென்ன
செய்யும்
என்பதை கீழே பாருங்கள்
சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்....
இந்தியாவில்
மட்டுமே இது வேகமாக
இயங்கி வருகிறது.
ஸ்கைப்
பயன்படுத்துவோரின்
காண்டாக்ட்
முகவரி எளிதாக
அவர்களைச்
சென்றடையும்.
இதில் ஏதேனும்
ஒரு லிங்க்
தரப்பட்டிருக்கும்.
இதில் கிளிக்
செய்தால், கெடுதல்
விளைவிக்கும்
வைரஸ் புரோகிராம்,
கம்ப்யூட்டரில்
வந்து விடும்
பின்னர் இந்த
புரோகிராம்,
கம்ப்யூட்டரில்
தரப்படும் பெர்சனல்
தகவல்களை,
இணையம் மற்றும்
வங்கி அக்கவுண்ட்களுக்கான
யூசர் நேம் மற்றும்
பாஸ்வேர்ட்களை,
தொலைவில் உள்ள
இன்னொரு
சர்வருக்கு அனுப்பிக்கொண்டே
இருக்கிறது.
அதனை இயக்குபவர்,
அங்கிருந்தே, உங்கள்
கம்ப்யூட்டரைத் தன்
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரும்
வகையில் இந்த
வைரஸ் புரோகிராம்
செயல்படும்.
இதனைத் தவிர்க்க,
ஸ்கைப் காண்டாக்ட்
முகவரியில் உள்ள
நண்பர்கள் மற்றும்
உறவினர்களிடமிருந்து வரும்
இன்ஸ்டண்ட் மெசேஜில்
உள்ள லிங்க்கில்
கிளிக் செய்திடக்
கூடாது.

Thursday, 7 November 2013

வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி!





இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள். இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசி ஏற்படாது. இஞ்சி எரிக்கும் குணத்தை உடையது. பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. கடினமான உணவுகளைக் கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது.

இஞ்சியில் உள்ள சத்துக்கள்

சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இஞ்சியில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி காயகல்பம்

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இதனை தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். நெஞ்சு உரம் பெறும்.

வாய்வுத் தொல்லை நீங்கும்

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் விட்டு கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

வலி நீக்கும் நிவாரணி

உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இஞ்சி. இயற்கை வழங்கிய கொடையான இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை உடையது.

இதயத்தை காக்கும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சளி இருமல் போக்கும்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டு சுண்ட காய்ச்சி வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு நீங்கும்.

சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும்.