Showing posts with label petrol. Show all posts
Showing posts with label petrol. Show all posts

Wednesday, 15 October 2014

தமிழக அறிவாளிகளுக்கு ஒரு சவால்..!!!



 Like us on: www.facebook.com/Maduramozhivu
எதிர்வரும் காலத்திற்கான ஒரு அவசியமான தகவல் நண்பர்களே..படித்துவிட்டு பகிருங்கள்..!!

இதுவும் ஒரு புரட்சியே!
இயற்கை புரட்சி!

நம் கையில் பழத்தை வைத்துகொண்டு (இயற்கை எரிவாயு), ஏன் அடுத்த நாட்டிடம் ஏன் கையேந்த வேண்டும்(கச்சா எண்ணை)

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: (Rs)75.00 ரூபாய்: இயற்கை எறிவாயு (எத்தனால்) தயாரித்தால் -1 லிட்டர் 13.00ரூபாய்

எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும்.டாலரின் மதிப்பு ரூபாய் விட குறையும்!!!

ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம்.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. பெட்ரோலுடன் 24 சதவீதம் எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 சதவிதமும், பெட்ரோல் 15 சதவீதமும் கலந்து பயன்படுத்தலாம்.

எத்தனால் செய்யும் முறை!!

எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து
தயாரிக்கப்படும் – எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,ஆக்சிஜனை உள்ளடக்கிய,ஒரு நிறமற்ற திரவம். (CH3CH2OH )

இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை
பயன்படுத்தும் போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புறசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.

ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது,கரும் புகை வெளிப்பாடு குறைந்து,ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன் 85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்டஅனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்துபயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்
பட்டிருக்கின்றன.

நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம்

கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,

அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்றஎரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் -உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்.

இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்டகரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் – சர்க்கரை விலை கணிசமாக குறையும்.

கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு
வேலை கிடைக்கும்.

ஒரு கேலன் என்பது மூன்றரை லிட்டருக்குச் சமம். ஒரு கேலன் எத்தனால் தயாரிக்க 40 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகிறது
இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால்,

பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ.
தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது.

உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது…

 Like us on: www.facebook.com/Maduramozhivu

Monday, 16 December 2013

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....? இத படிங்க முதல்ல...



அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...


{படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.}..