Sunday 16 March 2014

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்: நோக்கியா அறிமுகம்



                          

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம். உயர் ரக ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் செல்போன்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் செல்போன்கள் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் செயல்படுபவை. இதனால் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் செல்போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பிறகு ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் அந்நிறுவனம் செல்போன்களை அறிமுகப் படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே உள்ள லூமியா செல்போன்கள் விலையைக் காட்டிலும் இது குறைவான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. விரைவி லேயே இந்த செல்போன்கள் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளன. விலை ரூ.7,500 முதல்.

இவை எக்ஸ் சீரிஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோக்கியா எக்ஸ், எக்ஸ் பிளஸ், நோக்கியா எக்ஸ்எல் ஆகிய பெயர்களில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 4 மற்றும் 5 அங்குல திரை கொண்டதாகவும், மைக்ரோ சாப்டின் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியான ஒன்டிரைவ் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. சிவப்பு, சியான், மஞ்சள், கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் இது வெளிவந்துள்ளது. டியூயல் கோர் தொழில்நுட்பம், இரட்டை சிம் கார்டு வசதி கொண்டது.

No comments:

Post a Comment