Monday 20 January 2014

சம்பள விஷயத்தில் அஜித் செய்யும் ‘வெள்ளை’ப்புரட்சி…!

கரன்ஸி வேண்டாம், காசோலை கொடுங்க..!

சம்பள விஷயத்தில் அஜித் செய்யும் ‘வெள்ளை’ப்புரட்சி…! 





எல்லாவற்றிலுமே அஜித் வித்தியாசமானவர்தான்….! மற்ற நடிகர்கள் செய்யும் எதையும் இவர் செய்ய மாட்டார். இவர் செய்வதை மற்றவர்கள் செய்யவே முடியாது.

உதாரணத்துக்கு ‘சால்ட் பெப்பர்’ என்கிற நரைமுடியுடன் நடிப்பது. முக்கால் கிழமாகிவிட்ட நடிகர்கள் தொடங்கி, முழுக்கிழவர்களாகவே இருக்கும் நடிகர்கள்வரை தலைமுடிக்கு கருப்புசாயம் பூசிக்கொண்டு, பேத்தி வயசு நடிகைகளுடன் காதல் பாடலுக்கு ஆடிக்கொண்டிருக்க… அஜித் மட்டுமே தன் வயசுக்கேத்த உண்மைத்தோற்றத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், இல்லை…இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே எந்த நடிகரும் செய்யாத விஷயங்களைச் செய்து வரும் அஜித், சம்பளம் வாங்குவதிலும் சத்தமில்லாமல் மிகப்பெரிய புரட்சியையே செய்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியாத விஷயம். என்ன புரட்சி? கள்ளக்காதலுக்கும், கருப்புப் பணத்துக்கும் பேர் போன இடம் திரைப்படத்துறைதான். இங்கே நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளத்தில் சொற்பத்தொகையை மட்டுமே கணக்கில் காட்டுகிறார்கள்.

முக்கால்வாசித் தொகையை ரொக்கமாக வாங்கிக் கொண்டு, அதை கணக்கில் காட்டாமல் அமுக்கிவிடுகிறார்கள். 2000 ஆம் ஆண்டில் ‘வானத்தைப்போல’ படத்தில் நடித்தபோது விஜயகாந்துக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி. ஆனால் அவர் கணக்கில் காட்டியதோ வெறும் 24 லட்சம்தான். விஜயகாந்தைப்போலவே, அப்போதும், இப்போதும், திரைப்படத்துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருமே இப்படித்தான் உண்மையான சம்பளத்தை கணக்கில் காட்டாமல் ‘கள்ளக் கணக்கு’ காட்டுகிறார்கள்.

இந்த விஷயத்தில் அஜித் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்…! பல வருடங்களாகவே இவர் சம்பளமாக ரொக்கப்பணத்தை வாங்குவதே இல்லை. தன் சம்பளத்தை காசோலையாக மட்டுமே பெறுகிறார். இப்படி வாங்குவதன் மூலம் மொத்த சம்பளத்தையும் வங்கிக்கணக்கில் வரும்படி செய்து, அதற்கு நியாயமான வருமான வரியையும் கட்டி வருகிறார். அஜித்தின் இந்த செயல் அவரது போட்டியாளர்களாக இருக்கும் மற்ற ஹீரோக்களை ஏகத்துக்கும் எரிச்சல்படுத்தி இருக்கிறது.

இவர்கள் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? தற்போது 25 கோடி சம்பளம் வாங்கும் அஜித், அதை அப்படியே கணக்கில் காட்டும்போது, வருமான வரித்துறையினருக்கு ஒரு விஷயம் புரியும். இவர் 25 கோடி என்றால் விஜய் 20 கோடி, சூர்யா 22 கோடி என்று மற்ற ஹீரோக்களின் சம்பளத்தை எளிதில் யூகித்துவிடுவார்கள். அதற்கு குறைவான தொகையை மற்ற ஹீரோக்கள் கணக்கில் காட்டினால் வருமானவரித்துறையினர் நம்ப மாட்டார்கள். இதை எல்லாம் எண்ணித்தான் எரிச்சல்…!

நல்லவனாகவும் இருக்க மாட்டாங்க..! நல்லவனாகவும் இருக்க விட மாட்டாங்க..

No comments:

Post a Comment