Tuesday 4 June 2013

கணினி விளையாட்டு விரும்பியா நீங்கள்?

நான் கணினி கற்றுக் கொண்டதே அதில் உள்ள Dangerous Dave விளையாட்டையும் அலாவுதீன் விளையாட்டையும் விளையாட வேண்டும் என்பதற்காகத் தான். அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய கை வீடியோ கேம், கீ போர்ட் வீடியோ கேம் இப்போது எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை.
கணினியில் விளையாடப் பயன்படுத்தும் Joy Stick ஐ  ஒரு சிறிய கைக் கணினியுடன் (Tablet) பொருத்தி கணினி விளையாட்டு விரும்பிகள் அவர்களின் முழு ஈடுபாட்டுடன் விளையாட Nvidia நிறுவனம் Rs. 18000 விலையில் இந்த ஜூன் மாதத்தில் புதிய விளையாட்டு சாதனத்தை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
இது கையடக்க PlayStations வகை விளையாட்டு சாதனங்களுக்கு ஒரு பெரும் போட்டியாக அமையும் என்பதை இது பெரும் முன்பதிவு விற்பனை சொல்கிறது.
Shield என்று பெயரிடபட்டுள்ள இந்த சாதனத்தில் Tegra Processor,  16GB Internal Memory, MicroSD slot, 2GB Ram, Multi-Touch 5 Inch Screen with 720p Resolution உள்ளது.

No comments:

Post a Comment