Sunday 16 December 2012

ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க...



 
ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?


மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Useபகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

1. திரை ஒளிர்வு (Brightness)


மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth

Status Switch
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget(மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.

3. Live Wallpaper

Live Wallpaper
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets


ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

No comments:

Post a Comment